இசுறு பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலையில் மேற்கொள்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைகள் சம்பந்தமான விபரங்களும், அண்மையில் எடுக்கப்பட்ட அவற்றின் புகைப்படங்களும்.
1. புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா
மேற்படி நிகழ்வு 23.01.2010 திகதி அன்று வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்களால் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்குமாகாண கல்விப்பணிப்பாளர் திரு.வீ.இராசையா, யாழ்மாவட்ட மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு.வை.செல்வராசா அவர்களும் கரவெட்டி பிரதேச செயலர் திரு.S.சத்தியசீலன் அவர்களும் பாடசாலை ப.மா.சங்க தலைவர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
2. கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தலில் பயன்படுத்தக்கூடிய உத்திகள், பயன்தரு கற்பித்தல் முறைகள் பற்றி SLIDA தொலைக்கல்வி நிறுவனத்தால் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான இயக்குனர் திரு.Lal குமாரசிறி அவர்களால் முழுநாள் கருத்தரங்கு 20.09.2009 நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் EKSP பணிப்பாளர் திரு.அனுரதிசநாயக்க, இசுறு திட்டமிடல் பணிப்பாளர் திரு.பியசேனா, வடக்குமாகாண இசுறு பாடசாலை இயக்குனர் திரு.ஏ.மகேந்திரன் அவர்களும் பாடசாலை பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
3. இசுறு பாடசாலைகட்கு இணையத்தளம் ஏற்படுத்தல் தொடர்பாக கல்லூரியிலுள்ள இரு ஆசிரியர்கட்கு கொழும்பு SLIDA தொலைக்கல்வி நிறுவனத்தில் 3நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
4. இசுறு பாடசாலையில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கட்கு அவர்களின் கற்பித்தலை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு பாடத்திலும் 2ஆசிரியர்கட்கு தேசிய கல்வி நிறுவனத்தில் 2நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
5.பாடசாலைக்கு புதிதாக அமைக்கப்பட உள்ள கட்டிடத்தொகுதிகட்கு ஆன கூறுவிலைகோரல் விளம்பரம் தமிழ்செய்தி தாளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது..
Veerakesari 11.06.2010
6. பாடசாலை பெண் பிள்ளைகட்கு நிறசீருடை அமுலாக்கம்
7. பாடசாலை மாணவர்கட்கு கல்லூரி சின்னம்,
இசுறு சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி அறிமுகம்.
8.ஆசிரியர்கட்கு செவ்வாய்தினங்கள் , விஷேடநிகழ்வுகளின் போது அணிய குறித்த நிறசீருடை அறிமுகம்.
9. மாணவர் தலைவர்கட்கு Coat அறிமுகம்
10. மாணவர் தலைவர்கட்கு புதிய badge அறிமுகம்





